Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழ்ப்பாண மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விசேட புத்தாண்டு கண்காட்சி - தமிழ்வின்

யாழ்ப்பாண மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விசேட புத்தாண்டு கண்காட்சி - தமிழ்வின்

Source: Tamilwin

யாழ். மாவட்ட (Jaffna) உள்ளூர் முயற்சியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் புத்தாண்டை முன்னிட்டு உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் முயற்சியாளர்களின் கண்காட்சி இடம்பெற்றுள்ளது.

குறித்த கண்காட்சியானது நேற்று (11) ஆரம்பமாகியுள்ள நிலையில் நாளை (13) வரை தொடர்ந்து காலை 9 மணி தொடக்கம் மாலை 7 மணி வரை யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் சிலைக்கு அருகில் உள்ள கிட்டு பூங்காவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் பங்கேற்றுள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள் தங்களது உணவு உற்பத்திகள், பனைசார் உற்பத்திகள், காலணிகள், தைத்த ஆடைகள், பெண்களுக்கான கைப்பைகள், பூங்கன்றுகள் என பல்வேறு உற்பத்திகளையும் காட்சிப்படுத்தி உள்ளனர்.

இந்த கண்காட்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பொருள்களை கொள்வனவு செய்து வருவதோடு தொழில்துறை திணைக்களம், கைத்தொழில் அபிவிருத்தி சபை, சிறுதொழில் அபிவிருத்தி முயற்சி பிரிவு போன்ற திணைக்களங்களோடு சேர்ந்து யாழ்ப்பாண மாவட்ட செயலகம், ஆளுநர் அலுவலகம் மற்றும் யாழ் மாநகர சபையின் பூரண ஒத்துழைப்போடு கண்காட்சி இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில், இனிவரும் நாட்களில் வாராந்தம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நிரந்தரமாக கண்காட்சி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.