Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

சேவை நலன் பாராட்டு விழா | Virakesari.lk

சேவை நலன் பாராட்டு விழா | Virakesari.lk

Source: Virakesari.lk

யாழ். தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியின் அதிபராக பணியாற்றி ஓய்வுபெறும் ம.மணிசேகரனிற்கு சேவை நலன் பாராட்டுவிழா இடம்பெறவுள்ளது.

சேவை நலன் பாராட்டுவிழாவானது எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 06.00 மணிமுதல் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் கொழும்புக் கிளையின் தலைவர் இ.செல்வஸ்கந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

அத்தோடு, கலைநிகழ்வுகளுடன் இராப்போசன விருந்துபசாரத்தினையும் மகாஜனக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கொழும்புக் கிளையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சேவை நலன் பாராட்டு விழாவிற்கான நுழைவுச்சீட்டினைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் 0778818159 மற்றும் 0772531287 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.