Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

இலங்கையின் 13 பில்லியன் டொலர்கள் இறையாண்மை பத்திரங்களுக்கு பதிலாக புதிய பத்திரங்கள் - தமிழ்வின்

இலங்கையின் 13 பில்லியன் டொலர்கள் இறையாண்மை பத்திரங்களுக்கு பதிலாக புதிய பத்திரங்கள் - தமிழ்வின்

Source: Tamilwin

இலங்கையின் (Sri Lanka) நீண்டகால 13 பில்லியன் டொலர்கள் இறையாண்மை பத்திர கடனைத் (Sovereign bond) திருப்பிச் செலுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஒரு புதிய வகைப் பத்திரம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ள இறையாண்மை பத்திரங்களுக்கு பதிலாக இந்த புதிய பத்திரங்கள் விநியோகிக்கப்படும்.

இதன்கீழ், முன்னர் கலந்துரையாடியதன் படி முடிவெடுத்தல் மற்றும் கடன் செலுத்துவதற்கான காலத்தை 10 அல்லது 15 வருடங்களால் பிற்போடுதல் மற்றும் கால அவகாசம் போன்ற செயற்பாடுகள் இருக்காது.

அதற்கு பதிலாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களின் மீது நம்பிக்கைக்கொண்டு பத்திரகாரர்களுக்கு இலங்கையால் கொடுப்பனவுகள் செலுத்தப்படும்.

அத்துடன், வளர்ந்து வரும் சந்தைப் பத்திர முதலீட்டாளர்களின் நீண்டகால நோக்கமாகவும் இது அமையும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, இந்த புதிய பத்திரங்கள், நாட்டின் மீட்சியை கண்காணிக்கும் 'பேரண்ட - இணைக்கப்பட்ட பத்திரங்கள்' (macro-linked bonds) என்று அழைக்கப்படும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட கொடுப்பனவுகளை புதிய பத்திரங்களில் சேர்ப்பது கடன் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு பெரிய படியாகும் என்று கருதப்படுகிறது.

அத்துடன், இந்த செயற்பாடு, நிதியுதவி தேவைப்படும் அபாயகரமான வளர்ந்து வரும் சந்தை நாடுகளுக்கு மீண்டும் சர்வதேச முதலீட்டாளர்களை ஈர்க்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில், இலங்கைக்கும் பத்திரக்காரர்களுக்கும் இடையில் இடம்பெறும் சந்திப்புக்களில் இதற்கு உடன்பாடு எட்டப்படுமாக இருந்தால், விரைவில் இரண்டு தரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் செய்துக்கொள்ளப்படும் வாய்ப்புகளும் உள்ளன.