Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

மட்டக்களப்பு விளாவூர் யுத்தம் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி - தமிழ்வின்

மட்டக்களப்பு விளாவூர் யுத்தம் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி - தமிழ்வின்

Source: Tamilwin

மட்டக்களப்பு (Batticaloa) விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம் தனது 54ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு "விளாவூர் யுத்தம்" எனும் தொனிப்பொருளில் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஒன்றை நடாத்தியுள்ளது.

குறித்த போட்டியானது மே மாதம் 3ஆம், 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் ராஜா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 27 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இதில் 1ஆம் இடத்தினை காஞ்சிரங்குடா ஜெகன் அணியும், 2ஆம் இடத்தினை அரசடித்தீவு விக்னேஸ்வரா அணியும், 3ஆம் இடத்தினை பனையறுப்பான் கஜமுகா அணியும் பெற்றுக்கொண்டுள்ளன.

குறித்த உதைபந்தாட சுற்றுப் போட்டியின் இறுதி நிகழ்வில் பிரதம விருந்தினராக வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்துள்ளார்.