Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை - தமிழ்வின்

கல்முனையில் அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை - தமிழ்வின்

Source: Tamilwin

கல்முனையில் (Kalmunai) முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் (M.H.M.Ashraf) ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையில் 'அஷ்ரப் ஞாபகார்த்த அருங்காட்சியகம்' ஒன்றை நிர்மாணிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எம்.எச்.எம்.அஷ்ரபின் 24ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்கவே.அஷ்ரபின் பிறந்த ஊரான கல்முனையில் இந்த ஞாபகார்த்த அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்காக 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி, அதற்கான நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

திறமையான சட்டத்தரணியான எம்.எச்.எம்.அஷ்ரப், புகழ்பெற்ற அரசியல்வாதி என்பதோடு அவர் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களுக்காக பெரும் பணியாற்றியுள்ளார்.

முன்மாதிரியான மற்றும் மனிதாபிமானம் நிறைந்த மக்கள் பிரதிநிதியான அவர் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே மிகவும் மதிக்கப்பட்டவர் என்றும் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.