Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை...! ஆபத்தாக மாறியுள்ள மரங்கள் - ஐபிசி தமிழ்

கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை...! ஆபத்தாக மாறியுள்ள மரங்கள் - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

கொழும்பு (colombo) நகர எல்லையில் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 20 மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முறிந்து வீழ்ந்த மரங்களில் அபாயகரமானதாக இனங்காணப்பட்ட மரங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தகவலை கொழும்பு மாநகர சபை (Colombo Municipal Council) தெரிவித்துள்ளது.

கொழும்பு (colombo)நகர எல்லையில் ஆபத்தில் உள்ள சுமார் 200 மரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதன்படி இதுவரை சுமார் 100 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் காற்று காரணமாக, மரங்கள் விழுவது அதிகரித்துள்ளது.

இதேவேளை கொழும்பு - பொரளை தேவி பாலிகா வித்தியாலயத்திற்கு அருகில் நேற்று பாரிய மரமொன்று சரிந்து வீழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.