Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

தொடரும் சீரற்ற காலநிலை : யாழில் 7 குடும்பங்கள் பாதிப்பு - தமிழ்வின்

தொடரும் சீரற்ற காலநிலை : யாழில் 7 குடும்பங்கள் பாதிப்பு - தமிழ்வின்

Source: Tamilwin

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தொடர்ச்சியாக நிலவும் அசாதாரண காலநிலை காரணமாக 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதன்படி நல்லூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/125 கிராம சேவகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜே/191 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/33 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஜே/26 மற்றும் ஜே/21 ஆகிய பகுதிகளில் இரண்டு அடிப்படை கட்டமைப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/232 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதோடு வீடு ஒன்றும் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளது.

மேலும், யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/66 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/263 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொக்குவில் மேற்கு பகுதியில் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக வீட்டிற்கு மேல் பனைமரம் ஒன்று முறிந்து விழுந்ததில் வீட்டிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதோடு கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் 19.7 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

எனினும், இன்றைய காலநிலை அறிக்கையின் பிரகாரம் முற்பகல் வேளையில் கடல் கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நெடுந்தீவு யாழ்ப்பாண கடற்போக்குவரத்து இன்று இடம் பெறமாட்டாது என அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.