Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு விளக்கமறியல் நீடிப்பு - தமிழ்வின்

போதைப்பொருட்களுடன் கைதான கணக்காளருக்கு விளக்கமறியல் நீடிப்பு - தமிழ்வின்

Source: Tamilwin

அம்பாறை(Ampara) - மருதமுனை பகுதியில் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான கணக்காளரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கானது, நேற்று (27.05.2024) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபருக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை 14 நாட்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரான கணக்காளர் நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் மருதமுனை பகுதியில் வைத்து பெரிய நீலாவணை பொலிஸாரினால் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டிருந்தார்.

அண்மையில் மருதமுனை நகரை அண்டிய பகுதியில் ஐஸ் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான சந்தேக நபரின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு பெரிய நீலாவணை பொலிஸார் குறித்த கணக்காளரை கைது செய்து துரித விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது, கணக்களார் வசம் இருந்து ஐஸ் போதைப்பொருள் 840 மில்லி கிராம் கேரளா கஞ்சா 4 கிராமும் 540 மில்லி கிராமும் மீட்கப்பட்டிருந்தது.

மேலும், சந்தேக நபர் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளராக பணியாற்றியவர் என்பதுடன் தற்போது அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கணக்காளராகவும் தற்போது பணியில் இருப்பவர் என பொலிஸ் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.