Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த காவல்துறையினரின் வாகனம்: நாடாளுமன்றில் தமிழ் எம்பி கண்டனம் - ஐபிசி தமிழ்

வவுனியாவில் வீட்டுக்குள் நுழைந்த காவல்துறையினரின் வாகனம்: நாடாளுமன்றில் தமிழ் எம்பி கண்டனம் - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

வவுனியாவில் (Vavuniya) காவல்நிலைய பொறுப்பதிகாரியின் வாகனம் தனியார் வீடொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், விபத்தினை ஏற்படுத்திய காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (05) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்

''வவுனியா - நெடுங்கேணி பிரதேசத்தில் புளியங்குளம் காவல்துறை பொறுப்பதிகாரியின் வாகனம் தனியார் வீடொன்றுக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

நாட்டில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள் முழுமையான குடி போதையில் வாகனத்தை தனியார் வீடொன்றுக்குள் செலுத்தி உள்ளதுடன் மிக மிலேச்சதனமாக நடந்து கொண்டுள்ளனர்.

எனவே, இவ்வாறான காவல்துறைஅதிகாரிகளை வைத்து எவ்வாறு நாட்டில் சட்ட ஒழுங்கை பேண முடியும்'' என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.