Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்ட சம்பவம்; விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார் - தமிழ்வின்

யாழில் ஊடகவியலாளரின் வீடு தாக்கப்பட்ட சம்பவம்; விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள பொலிஸார் - தமிழ்வின்

Source: Tamilwin

யாழ்ப்பாணம் - அச்சுவேலியில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து உடைமைகளுக்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநரின் பணிப்பின் பிரகாரம் வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்குகின்ற நான்கு பொலிஸ் குழுக்கள் விசேடமாக அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அச்சுவேலி, பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது நேற்று அதிகாலை 12.15 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த ஜந்து பேர் கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது வீட்டிற்கு வெளியே இருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டதுடன் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் தடயவியல் பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து தடயங்களை சேகரித்ததோடு, பொலிஸ் விசேட கைரேகை நிபுணர்கள் பொருட்கள் மற்றும் வாகனங்களை எரிக்க பயன்படுத்திய பெட்ரோல் கொண்டுவரப்பட்ட கொள்கலனை கைரேகை பரிசோதனைக்கு உட்படுத்திய போது இருவரின் கைரேகை அடையாளங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதல் சம்பவத்தை நடாத்தியவர்கள் 10 இலட்சத்துக்கும் பெறுமதியான பொருட்களையும் வாகனத்தையும் சேதப்படுத்தியுள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்ட கும்பல் வீதியூடாக தப்பிச்சென்ற சிசிரிவி காணொளிகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஊடகவியலாளரின் ஊடகவியலாளரின் வீட்டிற்கு வருகை தந்து குறித்த தாக்குதல் சம்பவம் ஊடகவியலாளருக்கு அச்சத்தினை ஏற்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே குறித்த விடயம் தொடர்பில் அரச தரப்பினர், உரிய அதிகாரிகள் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.

மேலும் வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி. வி. கே.சிவஞானம் சம்பவ இடத்திற்கு வருகை தந்து குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலே குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரச்சினை தொடர்பில் நேரில் பேசி ஆராயப்பட வேண்டும் வன்முறை என்றும் தீர்வாகாது என்ற கருத்தினை முன் வைத்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வகுமார் குறித்த தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்டதுடன் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்படவேண்டும் என வலியுறுத்தினார்.