Stay on this page and when the timer ends, click 'Continue' to proceed.

Continue in 17 seconds

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 15 வயது சாதனை வீரன் - ஐபிசி தமிழ்

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த 15 வயது சாதனை வீரன் - ஐபிசி தமிழ்

Source: IBC Tamil

திருகோணமலையை (Trincomalee) சேர்ந்த முஹம்மட் ஹஷன் ஸலாமா இந்தியாவின் (India) தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் (Sri Lanka) தலைமன்னாருக்கு இடையிலான 42Km தூரத்தினை உடைய பாக்கு நீரிணையை நீந்தி சாதனை படைத்துள்ளார்.

15 வய­தான இவர் நேற்று (15) அதிகாலை 02.00 மணிக்கு ஆரம்பித்து முற்பகல் 11.00 மணியளவில் நீந்தி முடித்துள்ளார்.

பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது முஸ்லிம் நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.

தரம் 10 இல் கல்வி கற்கும் குறித்த சிறுவன் கடந்த மூன்று மாதங்­க­ளாக இச் சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வந்துள்ளார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில் நீந்திக் கடந்­துள்ளார்.

இலங்­கை­ய­ரான இள வய­தை­யு­டைய பஹ்மி ஹஸன் சலாமா நாட்டின் விளை­யாட்டுத்துறை வர­லாற்­றிலே தனது பெயரை பதிந்து கொள்­வ­தற்­காக தனது இலக்­கினை அடைந்து கொள்ளும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்.

இது­மட்­டு­மல்­லாமல், திரு­கோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடாத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்றியா­ள­ராக தெரிவாகி இருந்தார்.

குறித்த வீரன் விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.